பதிவு செய்த நாள்
14
பிப்
2019
02:02
கடலூர்: சிதம்பரம், கீரப்பாளையம் அடுத்த ஒரத்தூர் கோவில் கும்பாபிஷேக விழா வரும் 18 ம் தேதி நடக்கிறது.விழாவை முன்னிட்டு, 17 ம்தேதி மாலை 4:00 மணிக்கு அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, கணபதிஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, முதற்கால யாக சாலை பூஜைகள், 108 திரவி ஹோமமங்கள், பெரியாண்டவர், தூண்டில் வீரன் மூல மந்திர ஹோமம், இரவு தீபாராதனை நடக்கிறது.18ம் தேதி காலை 6:00 மணிக்கு ௨ம் கால யாக பூஜைகள் ஆரம்பம், 9:00க்கு கடம் புறப்பாடு, 9:20க்கு பெரியாண்டவர் விமான கும்பாபிஷேகம், 9:30க்கு விநாயகர், பெரியாண்டவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும், 9:40க்கு தூண்டில் வீரனுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.ஏற்பாடுகளை ஜி.ஆர்.கே., எஸ்டேட் உரிமையாளர் துரைராஜ் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.