* அறிவால் ஆராய்ச்சி செய்பவன் கடவுளை அறிய முடியாது. அவரை நம்பி வழிபட்டால் நன்மை கிடைக்கும். * கடவுள் ஒருவரே சத்தியப் பொருள். * அறியாமையில் இருந்து மனிதன் விடுபட கடவுளின் அருள் வேண்டும். * பக்தியுள்ளவனாக மாறு மூடத்தனத்திற்கு சிறிதும் இடம் கொடுக்காதே. * கடவுளின் பெயரை ஜபிக்க மனத்தூய்மை அவசியம். * கடவுளை அறிவதே மனிதப் பிறவியின் பயன். மனம் எப்போதும் கடவுளின் பக்கம் இருக்கட்டும். * அன்புக்கும், அறிவுக்கும் சமபங்கு அளிப்பவன் பாக்கியவான். அவன் சமநிலை இழக்க மாட்டான். * அநியாயம், பொய் போன்றவற்றை எதிர்க்காமல் சும்மா இருப்பது அறியாமை. * விவேகம், வைராக்கியம் இல்லா விட்டால் ஆன்மிக வாழ்வில் முன்னேற முடியாது. * விவேகம் இல்லாவிட்டால் பண்டிதனாகப் பட்டம் பெற்றிருந்தும் பயன் ஏதுமில்லை. * குடும்பத்தில் இருந்து கொண்டே கடவுளைச் சிந்திப்பவன் வீரமான பக்தன். * கடவுள் என்னும் எஜமானனுக்கு சேவை செய்யும் தொண்டனாக இருப்பதில் பெருமை கொள்ளுங்கள். -வேண்டுகிறார் ராமகிருஷ்ணர்