பதிவு செய்த நாள்
21
பிப்
2019
02:02
கிருஷ்ணகிரி: லட்சுமி வெங்கடேஸ்வரா சுவாமி கோவில் தேரோட்டத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை இழுத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே உள்ள பூதிமுட்லு கிராமத்தில், லட்சுமி வெங்கடேஸ்வரா சுவாமி திருக்கோவில் தேரோட்டம் நேற்று (பிப்., 20ல்) நடந்தது.
இதையொட்டி கடந்த, 1 3ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று (பிப்., 20ல்) நடந்த தேரோட்ட திருவிழாவில், லட்சுமி வெங்கடேஸ்வரா சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில், சுவாமியை பக்தர்கள் இழுத்து வந்தனர். இதில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தில் பல்வேறு அமைப்பினர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இரவில் சுவாமி அலங்கரிக்கப்பட்டு, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.