Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவகங்கை மலைக்கொழுந்தீஸ்வரர் ... கம்பம் சண்முகநாதன் கோயிலிற்கு செல்ல ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தொண்டி அருகே சோழர் காலத்து உறைகிணறு, சீன ஓடு கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 பிப்
2019
02:02

திருவாடானை : ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே எஸ்.பி.பட்டினத்தில் 11ம் நூற்றாண்டை சேர்ந்த சோழர்கால சுடுமண், உறைகிணறு, சீனநாட்டு பானை ஓடுகள்
கண்டெடுக்கப்பட்டது.

ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் ராஜகுரு, ராமநாதபுரம் அரசு மகளிர் கலை கல்லூரி தமிழ்த்துறை மாணவி சிவரஞ்சனி, திருப்புல்லாணி அரசு மேல்நிலைபள்ளி தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவர்கள் விசாலி, சுதர்சன், மனோஜ் ஆகியோர் எஸ்.பி.பட்டினம் ஐயாகுளத்தின் கரையில் ஆய்வு செய்தபோது இதனை கண்டுபிடித்தனர்.

இது குறித்து ராஜகுரு கூறியதாவது: இவ்வூர் சிவன் கோயில் எதிரில் உள்ள ஐயாகுளத்தின் கிழக்கு கரையில் மண்ணில் புதைந்த நிலையில் ஒரு சுடுமண் உறைகிணறு உள்ளது. உறைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்குவது, செருகுவது என உறைகிணறுகளில் இரு வகைகள் உண்டு.

இங்குள்ள கிணறு ஒரே அளவுள்ள இரு வட்டமான உறைகளை ஒன்றன் மீது ஒன்று அடுக்கி அதன் இடையில் களிமண்ணால் பூசபட்டுள்ளது.

ஏழு அடி சுற்றளவில் இக்கிணறு உள்ளது. இதன் உறைகள் ஒவ்வொன்றும் 15 செ.மீ., உயரம் உள்ளன. உறையை பொருத்தி அடுக்குவதற்கு ஏதுவாக அதன் மேல், கீழ்பகுதிகள் உள்ளே நீண்டு உள்ளன. இக் குளத்தின் வடக்கில் மரைக்காயர் குளம் உள்ளது.

இக்குளம் நிரம்பிய பின் அதன் உபரி நீர் ஐயாகுளத்திற்கு வருவதற்காக நான்கு சுடுமண் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை சுற்றிலும் செங்கல் கட்டுமானம் உள்ளது.
இந்த இரு குளங்களும் ஒரே காலக்கட்டத்தில் உருவாக்க பட்டிருக்கலாம். குளத்தில் தண்ணீர் வற்றிய காலங்களில் பயன்படுத்துவதற்காக இக்கிணறு தோண்டபட்டிருக்கலாம்.
இக்குளங்களின் மிக அருகில் பாம்பாறும் உப்பங்கழியும் உள்ளன.

இவ்வூரில் காணப்படும் சோழர் கால தடயங்கள் மூலம் இந்த உறைகிணறு கி.பி.11ம் நூற்றாண்டை சேர்ந்ததாக கருதலாம். ஐயாகுளத்தின் கரையில் சீனநாட்டு பானை ஓடுகள், சிவப்புநிறபானை ஓடுகள், கெண்டியின் நீர் ஊற்றும் பகுதி இரும்புத் தாதுக்கள், சுடுமண் கூரை ஓடுகள், வட்ட சில்லுகள், அறுத்த சங்கு ஆகியவை கண்டெடுக்கபட்டது.

சீன நாட்டு பானை ஓடுகளில் போர்சலைன், செலடன் என இருவகைகள் உள்ளன. போர்சலைன் என்பது வெள்ளை களிமண்ணால் உருவாக்கப்பட்டு அதன் மேல் கோடுகள், பூக்கள், வளைவுகள், இலை வடிவங்கள் ஆகியவற்றை வரைந்து பின் உப்பு பூச்சு மூலம் பளபளபாக்கபட்டுள்ளது.

இதில் சிறிய வகை மண்பாண்டங்கள் செய்யபடுகின்றன. கிண்ணம், குடுவை, போன்றவற்றின் அடிப்பகுதிகள் இங்கு கிடைத்துள்ளன. பாசி நிற களிமண்ணால் செய்யப்படும் செலடன் வகை மட்பாண்டங்களில் பச்சை, இளம்பச்சை சாம்பல், பழுப்பு நிறங்கள் உண்டு.

சேமித்து வைக்கும் பெரிய பாத்திரங்கள் இதில் செய்யப்படுகின்றன. இவ்வூரில் சீனர்கள் குடியிருப்பு இருந்திருக்க வாய்ப்பு உள்ளது.

இங்குள்ள சிவன் கோயில் கல்வெட்டுக்ளில் சுத்தவல்லியான சுந்தரபாண்டியபுரம் என இவ்வூர் குறிப்பிடப்பட்டுள்ளது. புரம் என்னும் சொல் வணிக நகரத்தை குறிக்கும் சங்கு அறுத்து வளையல் செய்யும் தொழில் இங்கு நடைபெற்றிருக்கலாம்.

இவ்வூரின் பழைய பெயர் சுத்தவல்லி. இது முதலாம் குலோத்துங்க சோழர்களின் மகள் சுத்தமல்லியாழ்வார் பெயரால் உருவாக்கப்பட்டது. இதை கைப்பற்றிய முதலாம் சுந்தர பாண்டியன் தனது பெயரை இவ்வூருக்கு சூட்டியுள்ளார், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழா டிசம்பர் 30 முதல் ஜனவரி 8 வரை 10 நாட்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் அவதரித்த தினமான இன்று 1008 பால்குடம் எடுத்து ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் அடுத்த முடியனுர் கிராமத்தில் பாழடைந்த அருணாச்சலேஸ்வரர் கோவில் ... மேலும்
 
temple news
சென்னை: ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள நாத நாகேஸ்வரர் கோவிலில், பொத்தப்பி சோழர்களின் ... மேலும்
 
temple news
‘‘பாரத பூமி ஒரு கர்ம பூமி; அளவற்ற ஆன்மிக சக்தியும், செல்வமும் சுரக்கும் தேசம். பொருளாதார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar