பதிவு செய்த நாள்
22
பிப்
2019
02:02
சிவகங்கை : பழமையான திருமலை மலைக்கொழுந்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் இன்று (பிப்., 22) நடக்கிறது.
திருமலையில் 8 ம் நூற்றாண்டில் முற்கால பாண்டியர்களால் உருவாக்கப்பட்ட குடைவரைக் கோயில் உள்ளது. சிவன், மீனாட்சி திருமணக் கோலத்தில் உள்ளனர். இக்கோயிலுக்கு வெளியே 13 ம் நூற்றாண்டில் பிற்கால பாண்டியர்களால் கோபுரம் எழுப்பப்பட்டது. அதில் பாகம்பிரியாள் அம்மனுடன் மலைக்கொழுந்தீஸ்வரர் லிங்க வடிவமாக காட்சியளிக்கிறார்.
பழமையான இக்கோயில் கும்பாபிஷேகம் 12 ஆண்டு கழித்து இன்று நடக்கிறது. கும்பாபிஷேக விழா பிப்., 18 ல் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. பிப்., 20 இரவு 7:00 மணிக்கு முதற்கால யாகபூஜை, பிப்., 21 காலை 8:45 மணிக்கு இரண்டாம் காலயாக பூஜை, மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால யாகபூஜை நடந்தன. இன்று (பிப்., 22ல்) காலை 6:00 மணிக்கு 4 ம் கால பூஜை, காலை 8:45 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தானம், திருமலை கிராமமக்கள் செய்கின்றனர்.