குளித்தலை: குளித்தலை பெரியபாலம் அடுத்த மலையப்பன் நகர் காளியம்மன்கோவில் திருவிழா, நேற்று முன்தினம் இரவு கரகம் பாலித்தலுடன் துவங்கியது. இதை முன்னிட்டு பெரியபாலம் பரிசல் துறை காவிரி ஆற்றிலிருந்து நேற்று, பக்தர்கள் பால் குடம் எடுத்து, அலகு குத்தி, அக்கினி சட்டி ஏந்தி, முக்கிய வீதிகள் வழியாக, ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். இரவு, மாவிளக்கு பூஜை, படுகளம் நடந்தது. இன்று காலை, சுவாமிகள் வீடு வீடாக சென்று பூஜை வாங்குதல் மற்றும் கிடா வெட்டு நடக்கிறது. அதன்பின், மஞ்சள் நீராடலுடன் விழா நிறைவடைகிறது.