செஞ்சி: மேல்களவாய் அருணாச்சலேஸ்வரருக்கு மழை வேண்டி 108 குடம் தண்ணீர் அபிஷேகம் நடந்தது.செஞ்சி பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளாக வறட்சி ஏற்பட்டு விவசாயம் நலிவடைந்துள்ளது. குடிநீருக்கு கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மழை வேண்டி செஞ்சி அருகே உள்ள மேல்களவாய் கிராம மக்கள் தங்கள் கிராமத்தில் உள்ள சிவசக்தி விநாயகர், பாப்பார மாரியம்மன், சிவசக்தி பாலமுருகன், உண்ணாமலை அம்பிகா சமேத அருணாச்சலேஸ்வரர் ஆகியோருக்கு தலா 108 குடம் தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து மலர் மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.