பதிவு செய்த நாள்
04
மார்
2019
03:03
மகுடஞ்சாவடி: சித்தர்கோவிலுக்கு சாலை அமைக்கும் பணி தொடங்கியது. சேலத்திலிருந்து, 15 கி.மீ தூரத்தில், கஞ்சமலை தொடரின் மேற்கு பகுதியில், கஞ்சமலை காலாங்கி சித்தர்கோவில் உள்ளது. அதன் அடிவாரத்திலிருந்து, கோவில் முகப்பு வரை, 500 மீ., தூர தார்ச்சாலையை புதுப்பிக்காததால், 15 ஆண்டுகளாக, குண்டும், குழியுமாக காட்சியளித்தது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகிவந்தனர்.
இந்நிலையில், 500 மீட்டர் தூர சாலையை புதுப்பிக்க, வீரபாண்டி தொகுதி எம்.எல்.ஏ., மனோன் மணி நிதி உதவியில், 20 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, கடந்த, 20ல், பூமிபூஜை விழா நடந்தது. நேற்று (மார்ச்., 3ல்), சாலை அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. விரைவில், இப்பணி முடியும் என, பணியாளர்கள் தெரிவித்தனர்.