பதிவு செய்த நாள்
04
மார்
2019
03:03
வீரபாண்டி: சேலம் அருகே, உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில், பிரதோஷமான நேற்று (மார்ச் 3ல்.,) மாலை நந்தியம்பெருமானுக்கு, 16 வகை மங்கள பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, தங்க கவசம் அணிவித்து பூஜை செய்யப்பட்டது.
பெரியநாயகி தாயார், கரபுரநாதர் உற்சவர்களுக்கு திருமஞ்சனம் செய்து, காளை வாகனத்தில் எழுந்தருள செய்தனர். மாலை, 6:00 மணிக்கு கோவிலில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெரியநாயகி சமேத கரபுரநாதரை தோளில் சுமந்து, சிவ சிவ கோஷங்கள் முழங்க கோவிலை மூன்று முறை வலம் வந்தனர்.
ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, சிவாச்சாரியார்கள், கட்டளை உற்சவதாரர்கள் செய்திருந்தனர். மகா சிவராத்திரியான இன்று (மார்ச் 4ல்.,) இரவு, 8:00 மணி முதல் நாளை (மார்ச் 5ல்.,)அதிகாலை, 5:00 வரை நான்கு கால பூஜை, அபிஷேகம் நடக்கவுள்ளது.