பதிவு செய்த நாள்
05
மார்
2019
02:03
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், மஹா சிவராத்திரி விழா, வெகு விமரிசையாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
பட்டினி கிடந்து வழிபட்டால், வேண்டிய வரத்தை வாரி வழங்குவது, சிவபெருமானின் குணம். தாயார் பார்வதி தேவிக்கு, ஒன்பது நாள் நவராத்திரி என்றால், தகப்பன் சிவனுக்கு, ஒரு ராத்திரி அது சிவராத்திரி என்பது சொலவடை. சிவராத்திரி இரவில் கண் விழித்து, நவசிவாய மந்திரத்தை உச்சரித்து, வில்வ இலைகளால் சிவலிங்கத்தை பூஜிக்க வேண்டும். இதனால் பல நூறாண்டுகள், சிவனை பூஜித்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சிவராத்திரியான நேற்று (மார்ச்., 4ல்), ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில், மகிமாலீஸ்வரர் கோவில், வெண்டிபாளையம் பச்சையம்மன் கோவில், கருங்கல்பாளையம் ஐயப்பன் கோவில், சீரடி சாய்பாபா கோவில், காவிரிக்கரை சோழீஸ்வரர் கோவில் உள்பட, மாநகரில் பல்வேறு கோவில்களில், சிறப்பு வழிபாடு இரவு முழுவதும் நடந்தது.
கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், நான்கு கால யாக வேள்வி பூஜை நடந்தது. சிவனடியார்கள், பக்தர்கள், மக்கள் என ஆயிரக்கணக்கானோர், நமசிவாய மந்திரத்தை உச்சரித்து சிவபெருமானை வழிபட்டனர்.