பதிவு செய்த நாள்
18
மார்
2019
03:03
பரமக்குடி:பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி(ஈஸ்வரன்) கோயிலின் சித்திரைத் திருவிழா, ஏப்., 9 ல் கொடியேற்றத்துடன் துவங்கவுள்ளது.
இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திருவிழா நடப்பதுவழக்கம். இதன் படி ஏப்., 9ம் தேதி காலை 11:00 மணிக்கு கொடிஏற்றப்படும். அன்று மாலை சிம்மாசனத்தில் பஞ்ச மூர்த்திகள்வீதியுலா வருவர்.
தினமும் காலை, மாலை என சுவாமி, அம்பாள் நந்திகேஸ்வரர்,கிளி, குண்டோதரன், சிம்ம, கைலாசம், அன்ன, ராவண, காமதேனு,ரிஷப வாகனங்களில் வீதியுலா நடக்கும். ஏப்., 15ல் குதிரை வாகனத்தில்திக் விஜயமும், மறுநாள் கமல வாகனத்தில் அம்மன் தபசு கோலத்தில் காட்சியளிப்பார்.
தொடர்ந்து இரவு சுவாமி - அம்பாள் மாலை மாற்றல் நிகழ்ச்சியும்,ஏப்., 17 காலை 11:00 மணி முதல் 11:45 க்குள் விசாலாட்சி அம்மனுக்கும் - சந்திரசேகரசுவாமிக்கு திருக்கல்யாணம், இரவு பூப்பல்லக்கில் வீதியுலா வருவர்.ஏப்., 18 காலை 9:30 முதல் 10:30 மணிக்குள் சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன்தனித்தனியாக ரதவீதியை சுற்றி சித்திரைத் தேரோட்டம் நடக்கும். மறுநாள் கொடியிறக்கத்துடன்சித்திரைத் திருவிழா நிறைவடையும். ஏற்பாடுகளை சுந்தர ராஜப் பெருமாள்தேவஸ்தான டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.