பதிவு செய்த நாள்
18
மார்
2019
04:03
திருப்பூர்:திருப்பூர், நல்லூர் அடுத்த காசிபாளையம் ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில் கும்பாபி ஷேகம் நேற்று நடந்தது.திருப்பூர், நல்லூர் அடுத்த காசிபாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில், பொதுமக்கள் சார்பில், திருப்பணிகள் நடந்தன. இதை தொடர்ந்து கும்பாபிஷேக விழா, 15ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று (மார்ச்., 17ல்) அதிகாலை, நான்காம் கால யாகபூஜை, கலசங்கள் புறப்பாடு நடந்தன.
பின்னர், புஷ்பகிரி வேலாயுதசாமி கோவில் வாகீசசிவம், தியாகராஜன் மற்றும் சிவராம கிருஷ்ணசிவம் ஆகியோர் தலைமையில், கோபுரங்களுக்கும், சக்தி விநாயகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது.சிறப்பு அபிஷேகத்துக்கு பின், தீபாராதனை, தச தானம், தச தரிசனம் நடந்தது.
விழாவையொட்டி, காலை 8:00 மணி முதலே பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று விநாயகரை தரிசித்தனர். விழா ஏற்பாடுகளை, பொதுமக்கள் மற்றும் திருப்பணிக்குழுவினர் மேற்கொண்டனர்.