பதிவு செய்த நாள்
18
மார்
2019
04:03
உடுமலை:உடுமலையில், நாடார் உறவின் முறையார் சங்கத்துக்குட்பட்ட பத்ரகாளியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம், வரும் 25ம்தேதி நடக்கிறது.
உடுமலை, சங்கிலி வீதி பத்ரகாளியம்மன் கோவிலில், கடந்த 12ம் தேதி திருவிழா நோன்பு சாட்டப்பட்டது. தொடர்ந்து, நேற்று (மார்ச்., 17ல்), மாலையில், கருப்பண்ணசாமி பூஜை நடந்தது. இன்று (மார்ச்., 18ல்)காலை, 6:00 மணிக்கு திருமூர்த்தி மலையிலிருந்து தீர்த்தம் கொண்டு வருதலும், புண்ணியார்ச்சனையும் நடக்கிறது. நாளை (மார்ச்., 19ல்), காலை, 10:30 மணிக்கு திருவிழா கொடியேற்றி, காப்புகட்டி, பக்தர்கள் முளைப்பாலிகை எடுக்கின்றனர். மாலையில், கும்பம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, 20ம் தேதி மாலை, பக்தி இன்னிசை, 21ம் தேதி மாலை ஏலோலங்கடியோ, என்ற தலைப்பில் நாட்டுப்புற திருவிழா, 22ம் தேதி இன்னிசை விழாவும் நடக்கிறது. 23ம் தேதி மாலை, பூவோடு ஊர்வலம் நடக்கிறது.
வரும் 24ம் தேதி மாலை, 5:00 மணிக்கு மாவிளக்கு மற்றும் பொங்கல் விழா நடக்கிறது. 25ம் தேதி காலை, 10:00 மணிக்கு அம்மன் திருக்கல்யாணம் மாலையில், அம்மன் திருவீதி உலா நடக்கிறது.26ம் தேதி கும்பம் விடுதல், முளைப்பாலிகை விட்டு நோன்பு நிறைவு செய்யப் படுகிறது. 27ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா மற்றும் மகா அபிஷேகம் இடம்பெறுகின்றன.