பதிவு செய்த நாள்
18
மார்
2019
04:03
வால்பாறை:வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 67ம் ஆண்டு பங்குனி உத்திரத் திருவிழா நேற்று (மார்ச்., 17ல்) காலை 11:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. முருகன் நற்பணி மன்ற தலைவர் மதனகோபால் முன்னிலையில் திருக்கொடி ஏற்றப்பட்டது.
முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது.விழாவில், இன்று (மார்ச்., 16ல்) மாலை, 6:00 மணிக்கு சிவாலயத்தில் பிரதோஷ பூஜையும், வரும், 20ம் தேதி மாலை, 3:30 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாணமும் நடக்கிறது.
வரும், 21ல், காலை, 9:00 மணிக்கு நல்லகாத்து ஆற்றிலிருந்து பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து ஊர்வலமாக வருகின்றனர். அதனை தொடர்ந்து காலை, 11:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை முருகன் நற்பணி மன்ற நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.