விழுப்புரம்:நன்னாடு பொறையாத்தம்மன் கோவிலில் தேர் திருவிழா நடந்தது.விழுப்புரம் அடுத்த நன்னாடு கிராமத்தில் விநாயகர், முத்துமாரியம்மன், ரதி மன்மதன், பெத்தாத்தம்மன், பொறையாத்தம்மன், பூரணி பொற்கலை சமேத ஐயனாரப்பன் சுவாமிகளுக்கு ஆண்டு தோறும் நடைபெறும் சிறப்பு உற்சவ பூஜைகள் கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்று முன்தினம் (மார்ச்., 21ல்) ரதி மன்மதன் தேர் வீதியுலாவும், காமன் தகனமும் நடந்தது. நேற்று (மார்ச்., 22ல்) காலை 6:00 மணிக்கு மன்மதன் உயிர்த்தெழுதல் வைபமும், 9:00 மணிக்கு பொறையாத்தாள் அம்மனுக்கு திருத்தேர் திருவிழாவும் நடந்தது.ஊர் முக்கியஸ்தர் சிவாஜி தலைமையிலான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். இன்று (மார்ச்., 23ல்) காலை 7:00 மணிக்கு சுவாமிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.