விழுப்புரம் சுப்ரமணிய சுவாமி கோவில் பங்குனி உத்திர பெருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மார் 2019 03:03
விழுப்புரம்:விழுப்புரம் அரசு மருத்துவமனை அருகே சென்னை நெடுஞ்சாலையில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா நடந்தது. விழாவையொட்டி கடந்த 17ம் தேதி காலை 6:00 மணிக்கு சுவாமிகளுக்கு காப்பு அணிவித்தல், கொடியேற்றம் மற்றும் பக்தர்களுக்கு காப்பு அணிவித்தல் நடந்தது. நேற்று முன்தினம் (மார்ச்., 21ல்) காலை 5:00 மணிக்கு அபிஷேக ஆராதனையும், அலகு அணிவித்தல், காவடி எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து 9:00 மணிக்கு தேர் வீதியுலாவும், பகல் 1:00 மணிக்கு அன்னதானம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு, வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணியசாமி திருக்கல்யாணமும், இரவு 7:00 மணிக்கு வாண வேடிக்கையுடன் சுவாமிகள் வீதியுலா நடந்தது.