* மற்றவர்களின் உடல்பலம், பணபலத்தைக் கண்டு பயப்படாதே.’நான் சாதிக்கப் பிறந்தவன்’ என்று செயலில் ஈடுபடு. * எல்லா உயிர்கள் மீதும் எதிர்பார்ப்பு இல்லாமல் அன்பு செலுத்து. *கடவுளை நோக்கி உன் மனதை திருப்பு. அமைதியும், ஆனந்தமும் நிலைக்கும். * தோல்வி என்பது தற்காலிகமானதே. தன்னம்பிக்கை, விடாமுயற்சி இருந்தால் வெற்றி கிடைத்தே தீரும். *சுறுசுறுப்புடன் இரு. அதே நேரத்தில் விவேகமாகவும் செயல்படு. * மகான்களின் வாழ்க்கை வரலாறைப் படி. சோதனை குறுக்கிட்டாலும் மனம் தளராமல் செயல்பட முடியும். * ’நாளை பார்க்கலாம்’ என வேலையை தள்ளிப் போடாதே. காலம் தாழ்த்தினால் உன்னை நீயே ஏமாற்றுவதாக பொருள். * பிறர் கூறும் பழிச் சொற்களை பொருட்படுத்தாதே. யார் மீதும் வெறுப்பு வேண்டாம். அமைதி, பொறுமையை மனதில் நிரப்பு. * வேலைக்காக வழிபாட்டைப் புறக்கணிக்காதே. பணியில் ஈடுபடும் போதும் ஆழ்மனம் பக்தியில் ஈடுபட வேண்டும். * முளைவிடும் விதை போன்றது எண்ணம். நன்மை, தீமையை விளைவிக்கும் இருவித எண்ணங்கள் உள்ளன. மனதிற்குள் எதை அனுமதித்தாலும் அதற்குரிய பலன் கிடைக்கும். * கூச்சல், குழப்பம் உள்ள இடத்தை விட்டு விலகு. அமைதியாக தனிமையில் அமர்ந்து பிரார்த்தனை செய்.