தம்பி உடையான் படைக்கஞ்சான் என்ற வாசகத்தை மெய்ப்படுத்திய பெருமை, ராமனின் சகோதரன் லட்சுமணரையே சேரும், குடும்பத்தில் சகோதர ஒற்றுமை இல்லாவிட்டால், பெற்றோர் படும்பாடு சொல்லி மாளாது. அவ்வீட்டில் மீண்டும் மகிழ்ச்சி தழைக்க என்ன செய்வது என்பதைப் பாருங்கள். ராமர் பட்டாபிஷேக படம் வாங்கி பூஜையறையில் மாட்டுங்கள். புனர்பூச நட்சத்திரம் அல்லது சனிக்கிழமை மாலையில் நெய்தீபம் ஏற்றி 108 அல்லது 1008 முறை ராம் என்றோ அல்லது ஸ்ரீராம ஜெயம் என்றோ ஜெபியுங்கள். அருகிலுள்ள ராமர் கோயிலுக்குச் சென்று துளசி மாலை சாத்தி மூன்றுமுறை சந்நிதியை வலம் வாருங்கள். ராமசகோதரர்களின் ஆசியோடு உங்கள் வீட்டிலும்பாசமலர்கள் பூத்துக் குலுங்கும்.