தட்சிணாமூர்த்தியின் காலின் கீழ் இருக்கும் அரக்கன் யார்? மற்றும் உள்ள நால்வர் யார்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மார் 2012 05:03
தட்சிணாமூர்த்தி அறிவின் வடிவம். அறியாமையை அழித்து நல்ல நிலை புகட்டுபவர். அறியாமை என்பது ஒரு அரக்கனைப் போன்றது. மனிதனை முன்னேறவிடாமல் தடுத்து அழித்துவிடும். எனவே அறியாமை எனும் அரக்கன் அழிக்கப்பட வேண்டியவன் என்பதை உணர்த்தவே காலின் கீழ் அபஸ்மாரம் எனும் அறியாமை வடிவ அரக்கனை மிதித்திருக்கிறார். தட்சிணாமூர்த்தியிடம் சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் எனும் நால்வர், முதலில் பாடம் படித்து இவ்வுலகுக்கு உண்மை அறிவு நூல்களை வழங்கியவர்கள். இவர்களையும் சேர்த்து வணங்கும் நிலையில், நால்வரும் தட்சிணாமூர்த்தியிடமே இருப்பார்கள்.