பதிவு செய்த நாள்
27
மார்
2019
02:03
ஈரோடு: ஈரோடு, கோட்டை பெரியபாவடியில் உள்ள ஓங்காளியம்மன் கோவில், பொங்கல் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு பொங்கல் விழா நேற்று (மார்ச்., 26ல்) இரவு, 9:00 மணிக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. பக்தர்கள் கொண்டு வந்த பல்வேறு மலர்கள், அம்மனுக்கு அர்ச்சனை செய்யப்பட்டது. இன்று (மார்ச்., 26ல்)இரவு, 9:00 மணிக்கு அக்னி கபாலம் வைத்தல் நடக்கிறது. 28ல், விளக்கு பூஜை, ஊஞ்சல் சேவை, 29ல் காலை, 6:00 மணிக்கு காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வருதல், தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பொங்கல் வைக்கும் வைபவும் நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு சிங்க வாகனத்தில் அம்மன் திருவீதி உலா புறப்பாடு நடக்கிறது. 30ல், மாலை, 5:00 மணிக்கு கோவில் வளாகத்தில் தெப்ப உற்சவம் நடக்கிறது. 31ல் மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.