பதிவு செய்த நாள்
27
மார்
2019
02:03
அதியமான்கோட்டை: தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டை காளியம்மன் கோவில் திருவிழா வை முன்னிட்டு, நேற்று (மார்ச்., 26ல்) தேர்த் திருவிழா நடந்தது. கடந்த, மார்ச்., 8ல், கூல் ஊற்றுதல், அம்மன் சக்திகரகம் வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது. 20ல், அதிகாலை, 4:00 மணிக்கு, கும்பபூஜை, 22ல், கோ பூஜை, விநாயகர் தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடந்தது. 23ல், பகல், 2:00 மணிக்கு, தேர் நிலை பெயர்த்தல் நடந்தது.
விழாவின் முக்கிய நாளான நேற்று (மார்ச்., 26ல்), மாலை, 3:30 மணிக்கு, திரளான பக்தர்கள் பங்கேற்று, வடம் பிடித்து பெரிய தேர் இழுத்தனர். வரும், ஏப்., 1ல், சதாவரம் குதிரை வாகனத்தில் வலம் வருதல் மற்றும் பந்தகாசி நடக்கிறது. 3 இரவு, 8:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டு விழா, 9:00 மணிக்கு, காளியம்மன் உற்சவர் ஊர்வலம் நடக்கிறது.