அந்தியூரில், பத்ரகாளியம்மன் கோவிலில் மகிஷாசூரமர்த்தனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மார் 2019 12:03
அந்தியூர்: அந்தியூரில், பிரசித்திபெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. கடந்த, 21ல் குண்டம் திருவிழா பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, மகிஷாசூரமர்த்தனம் நிகழ்ச்சி நேற்று (மார்ச்., 26ல்) நடந்தது.
அம்மனை பக்தர்கள் பல்லக்கில் தூக்கி வந்து, செலம்பூர் அம்மன் கோவில் சென்று அம்மனை அழைத்து கொண்டு மீண்டும் கோவில் வளாகத்தின் முன், பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய எருமை கன்றை வெட்டி, படைத்தனர். அந்தியூர் மட்டுமின்றி, சுற்றுவட்டாரப்பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.