ஈரோடு பெரியமாரியம்மன் கோவிலில் பால் கவர்களால் துர்நாற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மார் 2019 01:03
ஈரோடு: ஈரோடு, பெரியமாரியம்மன் கோவில் திருவிழா கடந்த, 19ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. 23ல் கம்பம் நடப்பட்டது.
தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கம்பத்துக்கு தீர்த்தம், பால் ஊற்றி வழிபட்டு வருகின்றனர். தீர்த்த நீரை, வீட்டில் இருந்து கொண்டு வரும் பக்தர்கள், பாலை வீட்டில் இருந்து பாத்திரத்தில் கொண்டு வருவதில்லை.
வரும் வழியில் கடைகளில் இருந்து, பால் பாக்கெட்டுகளை வாங்கி பிளாஸ்டிக் கவரில் ஊற்றுகின்றனர். இதனால், தினமும் ஆயிரக்கணக்கான பிளாஸ்டிக் கவர்கள் கோவிலில் சேருகிறது. தனியார் அமைப்புகள் முடிந்த வரை அதை அகற்றுகின்றனர். ஆனால், அதையும் மீறி, சிலர் பிளாஸ்டிக் கவரை வீசி விடுவதால், அவை கம்பத்தின் கீழ் உள்ள கால்வாயில் அடைத்து கொண்டு துர்நாற்றம் வீசுகிறது. பிளாஸ்டிக் கவர்கள் வருவதை, கோவில் பணியாளர்கள் தடுக்க வேண்டும்.