பதிவு செய்த நாள்
29
மார்
2019
01:03
மொடக்குறிச்சி: மொடக்குறிச்சியில் பிரசித்தி பெற்ற, கரிய காளியம்மன் கோவில் தேரோட்டம், நேற்று (மார்ச்., 28ல்) மாலை நடந்தது.
முன்னதாக விழா, கடந்த, 19ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து கிராமசாந்தி, கொடியேற்றம், அம்மன் அழைப்பு, சுவாமி திருவீதியுலா, மண்டப கட்டளை என, ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சி நடந்தது.
தேரோட்டத்தை ஒட்டி, நேற்று (மார்ச்., 28ல்) அதிகாலை, கரியகாளியம்மன் சுவாமி ரதம் ஏறும் நிகழ்வு நடந்தது. பின், தேர் நிலை பெயர்தல் தொடங்கியது. காலை முதல் மாலை வரை,
பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். சிறப்பு பூஜைகளும் நடந்தன. மாலை, 5:00 மணியளவில் தேர்த்திருவிழா நடந்தது.
மாலை, 6:30 மணிக்கு தேர்நிலை சேர்ந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர். மஞ்சள் நீராட்டு விழா, சுவாமி குடிபுகுதல் நிகழ்வு இன்று (மார்ச்., 29ல்) நடக்கிறது. இத்துடன் தேரோட்ட விழா நிறைவடைகிறது.