விழுப்புரம்:கைலாசநாதர் கோவிலின் பிரம்மோற்சவ விழா, வரும் 10ம் தேதி துவங்குகிறது. விழுப்புரத்தில் உள்ள, பிரஹன்நாயகி சமேத கைலாசநாதர் கோவிலின் பிரம்மோற்சவ விழா, வரும் 10ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
விழாவில் தினமும் காலையும், மாலையும் சுவாமி புறப்பாடு நடக்கிறது.பிரம்மோற்சவ விழாவின் முக்கிய உற்சவமான தேர்த் திருவிழா மற்றும் 63 நாயன்மார்கள் உற்சவம், வரும் 18ம் தேதி காலை 5:30 மணியளவில் நடக்கிறது. 19ம் தேதி, நடராஜர் தீர்த்தவாரி உற்சவமும், 21ம் தேதி, விடையாற்றி உற்சவமும் நடக்கிறது.பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, தினமும் மாலையில், தேவார சொற்பொழிவுக்கு பிரதோஷ பேரவையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை, தக்கார் செல்வராஜ், செயல் அலுவலர் ஜெயக்குமார், அர்ச்சகர் வைத்தியநாத சிவாச்சாரியார் செய்துள்ளனர்.