ஆண்டிபட்டி மாவூற்று வேலப்பர் கோயில் விழாவுக்கு பழநி விபூதி கொண்டுவர ஏற்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஏப் 2019 02:04
ஆண்டிபட்டி: மாவூற்று வேலப்பர் கோயில் சித்திரை திருவிழாவிற்கு தேவையான விபூதி ,பழநி பாலதண்டாயுதபாணி கோயிலில் இருந்து கொண்டு வர ஏற்பாடு செய்துள்ளனர்.
ஆண்டிபட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது மாவூற்று வேலப்பர் கோயில். ஓங்கி வளர்ந்த மருத மரங்கள், இயற்கையான சூழலில் அமையப்பெற்ற கோயில், கோயில் வளாகத்தில் பக்தர்கள் புனிதமாக கருதும் சுனைநீர் ஆகியவை தனிச்சிறப்பாக உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல் தேதியில் நடக்கும் விழாவில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் துவங்கும். முதல் நாள் இரவே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர். ஆண்டிபட்டி மற்றும் பல்வேறு சுற்றுக்கிராமங்களில் இருந்து பாதயாத்திரையாக பக்தர்கள் சென்று திரும்புவர். கோயிலில் அனைத்து பூஜைகளையும், இப்பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்களே மேற்கொள்கின்றனர்.
கோயிலுக்கு தேவையான விபூதி மூடைகளை பழநி பாலதண்டாயுதபாணி கோயிலில் இருந்து வாங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.