வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்.17ல் கம்பம் நடல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஏப் 2019 02:04
தேனி: பிரசித்தி பெற்ற வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவிற்காக ஏப். 17 ல் கம்பம் நடப்படுகிறது.தேனி மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் ஆயிரக்கணக் கானோர் கம்பத்திற்கு நீர் ஊற்றி வழிபடுவர்.
பின்னர் திருவிழா மே 7 ல் துவங்குகிறது. அன்று மலர் விமானத்தில் அம்மன் ஊருக்குள் இருந்து கோயிலுக்கு பவனி வருகிறார். மறுநாள் 8 ம்தேதி முத்துப்பல்லக்கில் அம்மன் புறப்படுகிறார்.மே 9ல் புஷ்ப பல்லக்கு, 10ல் தேர் வடம்பிடித்தல் , மே 13 ல் தேர் நிலைக்கு வருதல் முத்துசப்பரத்தில் அம்மன் திருத்தேர் தடம் பார்த்தல், 14ம் தேதி ஊர் பொங்கல் போன்றவை நடக்கிறது. இத் திருவிழாவில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த பல ஆயிரம் பேர் பங்கேற்பர். வெளியூர் பக்தர்கள் வசதிக்காக மதுரை, திண்டுக்கல் பகுதியில் இருந்து சிறப்பு பஸ் இயக்கப்படும்.