தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள அய்யாவாடி கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த மகா பிரத்தியங்கிரா தேவி கோயில் உள்ளது. எட்டு திசையிலும் மயானத்தால் சூ ழப்பட்ட இந்த கோயிலில் ராவணன் மகன் மேகநாதனும், பஞ்சபாண்டவர்களும் அம்பாளை பூஜித்து வேண்டிய வரங்களை பெற்றுள்ளனர்.
இங்கு அமாவாசை தோறும் மிளகாய் வற்றல் கொண்டு நடத்தப்படும் நிகும்பலா யாகம் சிறப்பு வாய்ந்தது. யாகத்தில் கலந்துகொண்டு அம்பாளை மனமுருக வணங்கி, சரணடைந்தால் சகல ஐஷ்வர்யங்களும் கிடைக்கும். பங்குனி மாத அமாவாசையான நேற்று கோயில் மண்டபத்தில் அம்பாளை எழுந்தருளச்செய்து பூஜைகள் நடத்தப்பட்டன. மதியம் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, கோயிலின் தலைமை அ ர்ச்சகர் தண்டபாணி குருக்கள் யாக குண்டத்தில் பழங்கள், ஹோமப் பொருட்கள் மற்றும் மிளகாய் வற்றலை சேர்த்து நிகும்பலா யாகத்தை நடத்தி வைத்தார். தொடர்ந்து ஸ்ரீ மகா பிரத்தி யங்கிரா தேவிக்கு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர். யாகத்திற்கான ஏற்பாடுகளை சங்கர் குருக்கள் செய்திருந்தார். கும்பகோணத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.