பதிவு செய்த நாள்
09
ஏப்
2019
03:04
பரமக்குடி:பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத் துடன் துவங்கியது.கோயில் கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க நந்தி கொடியை ஏற்றினர்.தொடர்ந்து அபிஷேக,ஆராதனைகள் நிறைவடைந்து பிரசாதம் வழங்கப் பட்டது. இரவு சுவாமி, அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் சிம்மாசனத்தில் வீதிவலம் வந்தனர்.
இன்று (ஏப்., 9ல்) முதல் தினமும் கற்பகத்தரு, கிளி, பூத, சிங்க, குதிரை, ரிஷபம், நந்திகேஸ் வரர், அன்ன வாகனங்களில் வீதிவலம் நடக்கும். ஏப்., 16ல் திருக்கல்யாண மண்டபத்தில் சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சியும்,ஏப்., 17 மாலை 7:00 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம், மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கிறது.
தொடர்ந்து யானை வாகனம், பூப்பல்லக்கில் சுவாமி, அம்மன் வீதிவலம்வருவர்.ஏப்., 18 காலை 8:30 மணிக்கு மீனாட்சி, சுந்தரேஸ்வரர் தனித்தனியாகவும், விநாயகர், முருகன் வள்ளி, தெய்வானையுடனும் தேரில் வலம் வரவுள்ளனர்.மறுநாள் கொடியிறக்கத்துடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை தேவஸ்தானடிரஸ்டிகள், ஆயிரவைசிய சபையினர் செய்து வருகின்றனர்.