பதிவு செய்த நாள்
12
ஏப்
2019
01:04
சூலூர்: சூலூர் சந்தன கருப்பராயன் கோவில் பொங்கல் விழாவில், சுற்றுப்பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். சூலூர், செங்கத்துறை, காடாம்பாடி கிராமத்தில், 1,019 ஆண்டு பழமை வாய்ந்த சந்தன கருப்பராயன் கோவில் அமைந்துள்ளது.
ராசிபாளையம் - செங்கத்துறை இணைப்பு சாலையில் உள்ள இக்கோவிலில், வெற்றி விநாயகர், வீரமாத்தியம்மன், லட்சுமி - பத்மாவதி ஸ்ரீனிவாசபெருமாள், கன்னிமார் சுவாமிகள், லாடகுரு தன்னாசியப்பர், மகாமுனீஸ்வரர் - கோட்டை முனீஸ்வரர் மற்றும் வீர ஆஞ்சநேயருக்கு சன்னதி கள் உள்ளன.கோவிலில், 1,019ம் ஆண்டு பொங்கல் விழா நடந்தது. இதையொட்டி, அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று வழிபட்டனர்.விழாவின் ஒருபகுதியாக, கோவில் தலைமை பூசாரி கருப்புசாமி அருள்வாக்கு வழங்கினார்.