பதிவு செய்த நாள்
12
ஏப்
2019
01:04
பெ.நா.பாளையம்:சித்ரா பவுர்ணமி தேர்திருவிழாவையொட்டி, பாலமலை ரங்கநாதர் கோவில் கொடியேற்று விழா நாளை (ஏப்., 13ல்)மதியம் நடக்கிறது.பெரியநாயக்கன்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பாலமலை ரங்கநாதர் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி தேர்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.
வழக்கம்போல, இந்தாண்டும் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாளை (ஏப்., 13ல்) மதியம், 12:00 மணி அளவில் கொடியேற்றம் நடக்கிறது.
தொடர்ந்து, 14ம் தேதி அன்னவாகனம், 15ல் அனுமந்தவாகனம், 16ல் கருடவாகனத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.இம்மாதம், 17ல் செங்கோதை யம்மன் அழைப்பும், 18ல் திருகல்யாண உற்சவத்தில் பெருமாள் புஷ்ப பல்லக்கில் எழுந்து அருளுகிறார். தொடர்ந்து, 19 மாலை, 5:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
விழாவையொட்டி, 20ல் பரிவேட்டை குதிரை வாகன உற்சவமும், 21ல் சேஷ வாகன உற்சவமும், 22ல் சந்தன சேவை சாற்றுமுறை நிகழ்ச்சியும் நடக்கின்றன.