பதிவு செய்த நாள்
13
ஏப்
2019
02:04
விழுப்புரம்:விழுப்புரம் மதுரை வீரன் கோவிலில் சித்திரை பெருவிழா நாளை 14 ல்,நடக்கிறது. விழுப்புரம், வழுதரெட்டி சாலாமேட்டில் மதுரை வீரன், பொம்மியம்மாள்,
வெள்ளையம்மாள் கோவில் அமைந்துள்ளது.
இங்கு, 12ம் ஆண்டு சித்திரை பெருவிழாவை முன்னிட்டு, கடந்த 10ம் தேதி பந்தக்கால் நடப்பட்டு, காப்பு கட்டும் உற்சவம் நடந்தது. தொடர்ந்து, சுவாமிக்கு தினமும் சிறப்பு அபிஷேகம் நடந்து வருகிறது.இன்று (13ம் தேதி) மாலை 6:30 மணிக்கு, பம்பை உடுக்கை வாசித்தலுடன் விழா முறைப்படி துவங்குகிறது.நாளை (14ம் தேதி) அதிகாலை 4:30 மணிக்கு மேல் 6:00 மணிக்குள், கோ பூஜை கங்கை நீர் மற்றும் 108 மூலிகைகளை கொண்டு
மகா கணபதி ஹோமம், சுவாமிக்கு பால் அபிஷேகம் நடக்கிறது.
இதை தொடர்ந்து, காலை 7:00 மணிக்கு மேல் 8:30 மணிக்குள், மதுரை வீரனின் குதிரை வாகனம் கொண்டு வரும் வைபவம், 8:30 மணிக்கு, சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு
தீபாராதனை நடக்கிறது. பக்தர்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். சித்திரை திருவிழா, வரும் 21ம் தேதி நிறைவடைகிறது. அன்றைய தினம் காலை, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடக்கிறது.விழா ஏற்பாடுகளை, சுந்தரேசன், ராயர், ஜெயராமன், கிருஷ்ணன், முனியன் உள்ளிட்ட விழாக்குழுவினரும், வாசுதேவன், பெரியார் உள்ளிட்ட ஊர் பிரமுகர்களும், ஊர் மக்களும் செய்துள்ளனர்.