மதுரை:மதுரை அனுப்பானடி தில்லையம்பல நடராஜ சுவாமி கும்பாபிஷேகத்தின் நிறைவு மண்டல மகாஅபிஷேகம் நடந்தது.யாககும்ப பூஜைகளை சிவாச்சாரியார்கள் எத்திராஜ், காளிதாஸ் நடத்தினர். ராமச்சந்திரன், சன்மார்க்க சேவகர் ராமநாதன் ஆகியோர் சிவநாமாவளி ஓதினர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி ராஜ மாணிக்கம் செய்திருந்தார். அன்னதானம் நடந்தது.