பதிவு செய்த நாள்
27
ஏப்
2019
03:04
கிணத்துக்கடவு: தாமரைக்குளம் மருத காளியம்மன் கோவில் திருவிழா, சிறப்பு அபிஷேக பூஜையுடன் நிறைவடைந்தது.
கிணத்துக்கடவு அடுத்த தாமரைக்குளம், மருத காளியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 23ம் தேதி துவங்கியது. தினமும், சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடு நடந்தது. சக்தி கரகம் எடுத்து ஆற்றுக்கு செல்லுதல், அம்மன் அழைப்பு நிகழ்ச்சிகள் நடந்தது.கடந்த, 24ம் தேதி
அதிகாலையில், விநாயகர் கோவிலில் இருந்து மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. நேற்று முன்தினம் (ஏப்., 25ல்) மஞ்சள் நீராடலும் திருவீதி உலாவும், நேற்று (ஏப்., 24ல்)பகல், 12:00 மணிக்கு, மருத காளியம்மனுக்கு சிறப்பு வழிபாடும், அபிஷேக, அலங்கார பூஜையும் நடந்தது.