பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை ரங்கநாதர் கோவில் சித்ரா பவுர்ணமி தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருக்கல்யாண உற்சவத்தை தொடர்ந்து திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. பரிவேட்டை எனும் குதிரை வாகன உற்சவம், சேஷ வாகன உற்சவங்கள் நடந்தன. மலைவாழ் மக்களின் கிருஷ்ணலீலா பிருந்தாவன் நிகழ்ச்சி நடந்தது.சந்தனசேவை சாற்றுமுறையுடன் விழா நேற்று (ஏப்., 26ல்)நிறைவடைந்தது.