திருப்பூர் :ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், சிவகாமியம்மை சமேத ஸ்ரீநடராஜ பெருமானுக்கு, சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது.
சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், மார்கழி திருவாதிரை ஆகிய நட்சத்திரம், ஆவணி, புரட்டாசி, மாசி மாதங்களில் சதுர்த்தசி திதி ஆகிய நாட்கள் மட்டும், நடராஜ பெருமான், சிவகாமியம்மைக்கு, சிறப்பு அபிஷேக பூஜைகள் நடக்கும்.திருவோண நட்சத்திர தினமான நேற்று, விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தன. சிவாச்சார்யார்கள், 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்தனர். மஞ்சள் சரங்கொன்றை மலர் உட்பட, பலவித மலர் மாலைகளை அணிந்து, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.