Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி கோயிலில் 48 ஆண்டுகள் ... கட்டிக் காப்பார் காலபைரவர் கட்டிக் காப்பார் காலபைரவர்
முதல் பக்கம் » துளிகள்
சப்த கன்னியர் பற்றிய குறிப்பு!
எழுத்தின் அளவு:
சப்த கன்னியர் பற்றிய குறிப்பு!

பதிவு செய்த நாள்

29 ஏப்
2019
05:04

சப்த மாதர் (அ) சப்த கன்னியர் என்னும் பெண் தெய்வங்களை கோயிலில் பார்த்திருப்பீர்கள். அவர்களைப் பற்றிய குறிப்பு இதோ...!

பிராஹ்மி: பிரம்மாவின் பெண் வடிவம் இவள். சூரிய, சந்திர ஒளியையும் மிஞ்சும் பிரகாசம் கொண்டவள். நான்கு தோள்களைக்  கொண்டவள். வாகனம் அன்னம். அனிச்சமலர் கொடி வைத்திருப்பாள். பத்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் இவள் நம் சருமத்தின் அதிபதி. இவளை வழிபட்டால் தோல் நோய் நீங்கும். சர்க்கரை கலந்த பிட்டு நைவேத்யம் செய்வது சிறப்பு.

மாகேஸ்வரி: மகேஸ்வரனின் பெண் வடிவம் இவள். ஜடாமுடியுடன் பாம்பை கழுத்தில் அணிந்திருப்பாள். வெண்மேகம் போன்ற நிறம் கொண்டவள். நெற்றிக்கண் கொண்டவள். நான்கு கைகள் கொண்டவள். வலது கரத்தால் பயம் போக்குவாள்; இடது கரத்தால் விருப்பத்தை நிறைவேற்றுவாள். வாகனம் ரிஷபம். எதிரி பயம், சண்டை சச்சரவில் இருந்து காப்பவள். வெட்டுக் காயம் குணம் பெற அருள்புரிவாள். குங்கும அர்ச்சனை, சுண்டல் நைவேத்யம் விருப்பமானவை.

கவுமாரி: முருகனின் பெண் வடிவம் கவுமாரி. வீரத்தின் அதிபதி. ரத்தின மகுடம் அணிந்திருப்பாள். அபய, வரத கைகளோடு மற்ற இரு கைகளில் அங்குசம், பாசக்கயிறு தாங்கியிருப்பாள். குங்கும நிறம் கொண்ட இவளுக்கு சிவப்பு பட்டாடை பிடிக்கும். மயில் கொடியும், மயில் வாகனமும் கொண்டவள்.  ரத்தம் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் வழிபட்டால் நிவாரணம் கிடைக்கும். பனை ஓலை விசிறியால் வீசி, எலுமிச்சை சாதம் படைத்தால் மகிழ்வாள்.

வைஷ்ணவி: விஷ்ணுவின் பெண் வடிவம். நாராயணி, சியாமளா என்றும் பெயருண்டு. தாமரை மலர் போன்ற கண்களை கொண்டவள். இவள் கைகளில் சங்கு, சக்கரம் வைத்திருப்பாள். மற்ற இரு கைகள் பயம் போக்கவும், வரம் அளிக்கவும் உள்ளன. வாகனம் கருடன். பாம்பு, பல்லி, தேள், கரப்பான் தொல்லையிலிருந்து விடுபடவும் வணங்குவர். பன்னீர் அபிஷேகம் செய்து சர்க்கரை பொங்கல் நைவேத்யம் செய்வது சிறப்பு.

இந்திராணி: இந்திரனின் பெண் வடிவம் இவள். அழகிய வேலைப்பாடு மிக்க ஆடைகளை விரும்புவாள். யானைக் கொடி ஏந்திய இவளின் வாகனம் வெள்ளை யானை. தசைப்பிடிப்பு, உடல் பருமன் பிரச்னை உள்ளோர் வழிபடலாம். குடும்பத்தில் யாருக்காவது அம்மை நோய் வந்தால் சந்தனக் காப்பு செய்து, சாமரம் வீசி, பலாச்சுளை நைவேத்யம் செய்யலாம். தன்னை சரணடைந்தவருக்கு உயர்பதவிகளை வழங்குவாள்.    

வாராஹி: திருமாலின் வராக அவதார வடிவம் இவள். பன்றி முகம் கொண்டவள். சப்த கன்னியரில் பிரதான இடம் பெற்றவள். போருக்கு கிளம்பும் முன் மன்னர்கள் வணங்கிச் செல்வர். இவளுக்கு தஞ்சாவூர் பெரிய கோயிலில் தனி சன்னதி உள்ளது. கருப்பு நிறம் பிடிக்கும். காலில் சிலம்பு அணிந்திருப்பாள். கலப்பை, உலக்கை ஏந்தியிருப்பாள். கல்வியில் சிறக்க மாணவர்கள் வழிபடுவர். தம்பதி ஒற்றுமை, இழந்த பொருளை மீட்க அருள்வாள். மனக்குழப்பம் தீர தயிர்ச்சாதம் நைவேத்யம் செய்யலாம்.

சாமுண்டீஸ்வரி: சிவபெருமானின் பெண் வடிவம். காளி என்றும் பெயருண்டு. எட்டு கைகளில் சூலம், கட்கம், அம்பு, சங்கு, சக்கரம், பாசம், பலகை, வில் ஏந்தியிருப்பாள். எருமை வாகனத்தில் அமர்ந்திருப்பாள். நரம்புத்தளர்ச்சி,  கை, கால் நடுக்கம் நீங்க  வழிபடலாம். இவளை உதாசீனப்படுத்தினால் கலவரம் வரும். ஊரின் வடக்கு எல்லையில் குடியிருப்பாள். இவளை குளிர்விக்க வெள்ளிக்கிழமையில் தயிர்சாதம், பால், சர்க்கரை சேர்த்த அவல் நைவேத்யம் செய்ய வேண்டும்.

 
மேலும் துளிகள் »
temple news
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தியை, சங்கடஹர சதுர்த்தியாக அனுஷ்டிப்பது உங்களுக்கு தெரியும். ... மேலும்
 
temple news
முருகனுக்குரிய விரதங்களில் பங்குனி உத்திரமும் ஒன்று. இந்நாள் சாஸ்தா, சிவன், விஷ்ணு ஆகிய ... மேலும்
 
temple news
பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும், பவுர்ணமியும் சேர்ந்து வரும் நாளே பங்குனி உத்திரமாகும். இது ... மேலும்
 
temple news
பவுர்ணமியில் சந்திரன் 16 கலைகளுடன் பரிபூரணமாக பிரகாசிக்கும். இன்று கிரிவலம் சென்று வழிபட மனஅழுத்தம், ... மேலும்
 
temple news
இன்று பங்குனி பிரதோஷ விரதம். சிவனை வழிபட எல்லாம் நன்மையும் நடக்கும்.பிரதோஷ விரதம் இருந்தால், சிவன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar