பதிவு செய்த நாள்
06
மே
2019
03:05
ஊட்டி : காந்தளில் மூவுலகரசி அம்மன் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது.ஊட்டி அருகே காந்தள் மூவுலகரசி அம்மன் கோவிலில் நடப்பாண்டு, தேர் திருவிழாவையொட்டி, கடந்த, 18ம் தேதி திருவிளக்கு பூஜை, மகா சிறப்பு அபிஷேக குழுவினர், மங்கள சண்டி ஹோமம் நிகழ்ச்சி நடந்தது.
முக்கிய நிகழ்ச்சியான நேற்று (மே., 5ல்) கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், மகா சிறப்பு அபிஷேகம், அம்மன் கோவில் வலம் வருதல், மகா தீபாராதனை, அன்னதானம் நடந்தன. முன்னதாக காசி விஸ்வநாதர் நவ கலச தீர்த்தம் பால் குட ஊர்வலம் நடந்தது.மாலை, 6:30 மணியளவில் திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டது. முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலத்தில் பக்தர்கள் பூஜைகள் செய்து வழிபட்டனர். வரும், 10ம் தேதி மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.