காசியில் ஒருமுறை கடும் பஞ்சம் ஏற்பட்டது. மக்களின் பசி போக்குவதற்காக பார்வதிதேவி, அன்னபூரணியாக அவதாரம் எடுத்தார். அன்னம் என்றால் உணவு என்று பொருள். பூரணி என்றால் முழுமையாக உடையவள் என்று பொருள். உணவை முழுமையாக கொண்ட அன்னபூரணி அட்சய பாத்திரம் பெற்று அதிலிருந்து வற்றாத உணவை எடுத்துக் கொடுத்து பக்தர்களின் பசியைப் போக்கினார். அந்த சமயத்தில் மக்களோடு மக்களாக சிவபெருமானும் அன்னபூரணியிடம் உணவு வாங்கிச் சாப்பிட்டார். அந்த நாள் தான் அட்சய திருதியை. எனவே, இந்நாளில்ஓம் நமசிவாய சொன்னால் சிவனருள் கிடைக்கும்.