பிள்ளையாருக்கு 9 அகல் விளக்குகளில் தேங்காய் எண்ணெய் ஊற்றி தீபமேற்றி வழிபட்டால் தடைகள் நீங்கி வேலை வாய்ப்பு கிடைக்கும். ஸ்ரீவாராஹி அம்மனுக்கு 2 நெய்விளக்குகள் ஏற்றி வழிபட்டாலும் விரைவில் வேலை கிட்டும். ஐயப்பனை மனதார வணங்கி வழிபட்டால், வேலை இல்லாதவர்க்கு வேலையும், குடும்பத்திலுள்ள அனைத்துவிதமான பிரச்னைகளும் படிப்படியாகத் தீரும். மேலும், 60 வயதைக் கடந்த தம்பதிக்கும் தட்சணையும், துப்புரவு பணியாளர்களுக்கு துணிமணிகளும் வழங்கினால் நல்ல வேலை வாய்ப்பு வாய்க்கும்.