பல்லடம்: பல்லடம், என்.ஜி.ஆர்., ரோட்டில், பழமை வாய்ந்த பொங்காளியம்மன் கோவில் உள்ளது.
ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில், பல ஆண்டுக்குப் பின், பக்தர்களின் முயற்சியால், கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. நேற்று, முதலாம் ஆண்டு கும்பாபிஷேக விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக, காலை, 6.15 மணி முதல், யாகசாலையில், விநாயகர், நவக்கிரஹம் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு வேள்வி வழிபாடுகள் நடந்தன. சித்தம்பலத்தில் இருந்து, காமாட்சிபுரி ஆதீன சீடர்கள் வேள்வி வழிபாடுகளை நடத்தி வைத்தனர். தொடர்ந்து, பூஜிக்கப்பட்ட தீர்த்த கலசங்கள், கோவிலைச் சுற்றி எடுத்துவரப்பட்டு, பொங்காளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக பூஜைகள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில், பொங்காளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.