பதிவு செய்த நாள்
10
மே
2019
03:05
நாமக்கல்: நாமக்கல்லில் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்பாளுக்கு ஜென்மோற்சவ விழா மூன்று நாட்கள் நடக்கிறது.
நாமக்கல், கடைவீதி வாசவி கன்னிகா பரமேஸ்வரி சத்திரத்தில் வாசவி கன்னிகாபரமேஸ் வரி ஜென்மோற்சவ விழா, வரும், 12ல் துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது. முதல் நாள் காலை, 7:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை கலசஸ்தாபனம்; மறுநாள் ஏக தின லட்சார்ச்சனை, அலங்காரம், மஹா தீபாராதனை. வரும், 14 காலை, 9:00 மணிக்கு லலிதா சஹஸ்ரநாம ஹோமம், 10:30 மணிக்கு பூர்ணா ஹூதி, அபிஷேககம், 12:30 மணிக்கு அலங்காரம் தீபாராதனை, பொங்கல், மா விளக்கு பூஜை, இரவு, 7:00 மணிக்கு குத்துவிளக்கு பூஜை, ஊஞ்சல் உற்சவம், 8:00 மணிக்கு தீபாராதனை, வாசவி அம்பாள் திருவீதி ஊர்வலம் நடக்கிறது. ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்துள்ளனர்.