பதிவு செய்த நாள்
13
மே
2019
02:05
குனியமுத்தூர்: குனியமுத்தூரிலுள்ள இறை இரக்க ஆலயத்தின், 10ம் ஆண்டு நிறைவு முன்னிட்டு தேர் திருவிழா கடந்த, 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.தொடர்ந்து ஒன்பது நாட்கள் திருப்பலி, மறையுரை உள்ளிட்டவை நடந்தன. பிரான்சிஸ் ஜெரார்டு, மகேஷ்குமார், கோவை மறை மாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப்ஸ்தனிஸ், பிலிப், கிறிஸ்டோபர், பெர்னாட்ஷா உட்பட பலர் சிறப்பு பிரசங்கம் செய்தனர்.
நிறைவு நாளான நேற்று (மே., 12ல்) காலை, கூட்டு பாடல் திருப்பலி, முதல் நன்மை வழங்கல் ஆகியவற்றை, கோவை மறை மாவட்ட முதன்மை குரு மெல்கியோர் நடத்தினார்.
தொடர்ந்து சிறப்பு திருப்பலி, அருட்தந்தைகள் பிரான்சிஸ், ஆரோக்கிய ராஜேஷ், மரிய ஆனந்த் ஆகியோரால் நடத்தப்பட்டது. மாலையில், கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்கு வினாஸ் தலைமையில், திருவிழா ஆடம்பர கூட்டுப்பாடல் திருப்பலி நடந்தது.
இதையடுத்து, அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் திருத்தேர் பவனி ஆலயத்தில் துவங்கி, குனியமுத்தூர் பஸ் ஸ்டாப் வரை சென்று, திரும்பியது. நிறைவாக, திவ்ய நற்கருணை ஆசீர் வழங்கப்பட்டது. பங்கு மக்கள் திரளாக பங்கேற்றனர். ஏற்பாடுகளை, ஆலய பங்குத்தந்தை ஆன்டனி யேசுராஜ் செய்திருந்தார்.