Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 1,200 வட்டெழுத்துடன் கூடிய நடுகல் மாடம்பாக்கம் கோவிலில் சிறப்பு லட்சார்ச்சனை மாடம்பாக்கம் கோவிலில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை வேண்டி ஏகாதச ருத்ர ஜபம்
எழுத்தின் அளவு:
மழை வேண்டி ஏகாதச ருத்ர ஜபம்

பதிவு செய்த நாள்

20 மே
2019
01:05

ஊத்துக்கோட்டை: பருவ மழை பொய்த்துப் போனதால், குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு பொதுமக்கள் அவதிப்படும் நிலையில், மழை வேண்டி ராமலிங்க ஈஸ்வரர் சுவாமிக்கு, 1,008 குடம் தண்ணீர் அபிஷேகம் நடந்தது.

எல்லாபுரம் ஒன்றியம், சூளைமேனி ஊராட்சியில் உள்ளது ராமலிங்க ஈஸ்வரர் சமேத பர்வதவர்தினி அம்மன் கோவில்.  சமீப காலமாக பருவ மழை பொய்த்துப் போனதால், மழை வேண்டி, இக்கோவிலில், ஏகாதச ருத்ர ஜபம் மற்றும் சகஸ்ர கடாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் மாலை, மூலவர் ராமலிங்க ஈஸ்வர சன்னதிக்கு செல்லும் வழியை, களிமண்ணால் பாதி அடைத்த நிலையில், 1,008 குட தண்ணீர் அபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது, குப்புசாமி சாஸ்திரிகள் தலைமையில் சிவாச்சாரியார்கள் 11 முறை, ஏகாதச ருத்ர ஜபம் செய்தனர்.  சகஸ்ர கடாபிஷேகம் மற்றும் ருத்ர ஜபத்தை காண திரளான பக்தர்கள் பங்கேற்றனர். 1,008 குட தண்ணீர் அபிஷேகம் முடிந்த நிலையில், சுவாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. பின், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால், சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். 15 ஆண்டு களுக்கு முன், இதேபோல், சகஸ்ர கடாபிஷேகம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar