கம்மாபுரம்: கம்மாபுரம் அடுத்த வி.குமாரமங்கலம் அனந்தாயி அம்மன் கோவிலில், வருஷா பிஷேக விழாவில், ஏராளமானோர் பங்கேற்று வழிபாடு செய்தனர்.இதனையொட்டி, நேற்று முன்தினம் (மே., 18ல்) காலை 7:00 மணிக்கு கணபதி ஹோமம், 108 அபிஷேக ஆராதனை நடந்தது. காலை 10:30 மணிக்கு அம்மன் சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். பொங்கல் வைத்து பூஜை செய்யப்பட்டது. ஏராளமானோர் பங்கேற்று வழிபாடு செய்தனர்.