Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

காசி கயாவில் பிண்டம் கொடுத்தபின் ... வாசலில் சிலர் கடவுளின் உருவத்தையே ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நம : பார்வதீ பதயே என்பது என்ன?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மார்
2012
04:03

சிவன் கோயில்களில் நம:பார்வதீபதயே என ஒருவர் சொல்ல, ஹரஹர மகாதேவா என்று மற்றவர்கள் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். இதன் பொருள் என்ன?
 பார்வதிதேவிக்கு பதியாக (கணவராக) இருப்பவர் பரமசிவன். பார்வதீபதி என்கிற அவரே உலகுக்கெல்லாம் தகப்பனார். பெரிய தெய்வமானதால் அவருக்கு மகாதேவன் என்றும் பெயர். பூலோகத்தில் ஒரு குழந்தை அவரை ஹர ஹர என்று சொல்லி ஓயாமல் வழிபட்டு வந்தது. அந்தக் குழந்தைக்கு ஞானசம்பந்தர் என்று பெயர். இந்தக் குழந்தை ஊர் ஊராக ஹர ஹர நாமத்தைச் சொல்லிக் கொண்டு போவதைப் பார்த்து, எல்லா ஜனங்களும் அரோஹரா என்று கோஷம் போட்டார்கள். அந்த கோஷம் கேட்டதும், உலகத்தில் இருந்த கெட்டதெல்லாம் உடனடியாகக் காணாமல் ஓடிப்போய் விட்டது. வையத்தில் அதாவது உலகத்தில் கஷ்டமே இல்லாமல் போனது. என்றைக்கும் இதே மாதிரி ஹர ஹர சப்தம் எழுப்பிக் கொண்டே இருக்கட்டும். அதனால், உலகத்தின் கஷ்டங்கள் எல்லாம் போகட்டும், என்று சம்பந்தக் குழந்தை தேவாரம் பாடிற்று. அரன் நாமமே சூழ்க வையகமும் துயர் தீர்கவே அரன் என்றால் ஹரன். ஹரன் என்றால் சிவன். இப்போது நான் (பெரியவர்) நம: பார்வதீபதயே! என்று சொல்வேன். உடனே நீங்கள் அம்மையான பார்வதியையும் அவர் பதியான நம் அப்பா பரமசிவனையும் நினைத்துக் கொண்டு அன்றைக்கு அந்தக் குழந்தை சொன்ன மாதிரியே பக்தியோடுஹர ஹர மகாதேவா என்று சொல்ல வேண்டும்.  நம: பார்வதீ பதயே! ஹர ஹர மகாதேவா!!

-விளக்குகிறார் காஞ்சிப்பெரியவர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar