பதிவு செய்த நாள்
04
ஜூன்
2019
01:06
பொள்ளாச்சி:பொள்ளாச்சி, கஞ்சம்பட்டி கமலகாமாட்சி அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா வரும், 4ம் தேதி காலை, 7:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் துவங்குகிறது.கணபதி ஹோமம், லட்சுமி பூஜை, தீபாராதனையும், மாலை, 5:00 மணிக்குவிநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி, யாகசாலைபிரவேசம், முதற்கால யாக பூஜையும்நடக்கிறது
வரும், 5ம் தேதி காலை, 9:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, மாலை, 4:00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜையும்; இரவு, 10:00 மணிக்கு கமலகாமாட்சி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கிறது.வரும், 6ம் தேதி காலை, 5:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, பூர்ணாகுதி, யாத்ரா தானம், கடம் புறப்பாடு; காலை, 8:30 மணிக்கு விமான கும்பாபிஷேகம், விநாயகர், பாலமுருகன், நவக்கிரகம், கமலகாமாட்சி அம்மனுக்கு மகாகும்பாபிஷேகம் நடக்கிறது.அதையடுத்து, மகா அபிஷேகம், அலங்காரம், தச தரிசனம், தசதானம், கோ பூஜையும், அன்னதானமும் நடக்கிறது.