கவுண்டம்பாளையம் வீரமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூன் 2019 01:06
பெ.நா.பாளையம்:கவுண்டம்பாளையம் சரவணா நகரில் ரங்கநாதர் வீரமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து, முளைப்பாரி எடுத்து வருதல், சீர்வரிசை கொண்டு வருதல், யானை, குதிரை மற்றும் பசுமாடு ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
விழாவையொட்டி, தீர்த்தம் எடுத்து வருதல், யாகசாலை அமைத்தல், பூமி பூஜை, காயத்ரி ஹோமம் நடந்தன. கும்பாபிஷேக நாளில் பல நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்கள் அடங்கிய கலசங்கள் கோவிலை சுற்றி வலம் வந்த பின், கும்பாபிஷேகம் நடந்தது. அன்னதானத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்