ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அடுத்த, ராள்ளபாடி கிராமத்தில் உள்ளது ஷீரடி சாய்பாபா கோவில். பக்தர்கள் பங்களிப்புடன் கட்டப்பட்ட இக்கோவிலில், முதலாம் ஆண்டு விழா நடந்தது.
இதையொட்டி, காலை, 7:00 மணிக்கு, யாகசாலை அமைத்து, சிறப்பு பூஜைகள் நடந்தன. யாகசாலையில் இருந்து, புனிதநீரை சுமந்து கொண்டு சாய்பாபாவிற்கு அபிஷேகம் செய்தனர். பின், பக்தர்கள் தங்களது கைகளால் சாய்பாபாவிற்கு பாலாபிஷேகம் செய்தனர். பின், பாபாவிற்கு சிறப்பு அலங்காரம் செய்து, மகா ஆரத்தி காட்டப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் சாய்பாபாவை தரிசனம் செய்தனர்.