செக்கானூரணி: செக்கானூரணி அருகே ஆ.கொக்குளம் அய்யனார் கோயில் திருவிழாவை முன்னிட்டு எருதுகட்டு விழா 23 ஆண்டுகளுக்குப்பின் நடந்தது. ஆ.கொக்குளம் ஆறு பங்காளிகள் கொண்டாடும் எருது கட்டு திருவிழா, ஜூன் 4 ல் குதிரை எடுப்பு திருவிழாவுடன் துவங்கியது. பட்டத்து குதிரைகளையும், 21 பரிவார தெய்வங்களையும் கோயிலில் கொண்டு வந்து சேர்த்து சிறப்பு வழிபாடுகள் நடத்தினர். நேற்று மாலை 4:00 மணிக்கு ஊர் பெரியவர்கள் குடை பிடித்து அய்யனார் கோயிலுக்கு வந்து சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் எருது கட்டு விழாவைத் துவக்கி வைத்தனர்.